எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் ஆற்றிய உரையில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை. மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க முடியாது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காண்போம் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


