எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரிஸ்: பிரான்சில் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன் பிரான்ஸ் பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ரஷ்யாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும்.
ரஷ்ய தூதரகத்திற்கு எதிரே அந்த மெழுகுசிலையை வைத்த அவர்கள், 'புடின் மற்றும் மேக்ரான் கதிரியக்கக் கூட்டாளிகள்', என்ற பெயர் பலகையையும் வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிலையை மீட்டு மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர்.
உக்ரைன் உடனான போருக்குப் பிறகு, ரஷ்யாவில் இருந்து பிரான்ஸ் இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டை காட்டிலும் 2023ல் உரங்களின் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


