எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக, அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பெங்களூரு அணி வீரர்கள் கோப்பையுடன் , பெங்களூரு விதான் சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை திறந்தவெளி பஸ் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் கோப்பை பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ரத்து செய்யப்பட்டது.
ராஜீவ் சுக்லா வேண்டுகோள்
18-வது ஐ.பி.எல். கோப்பையை வென்ற பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில், பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ துணை துணைத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராஜீவ் சுக்லா கூறியதாவது, இதற்கு ஆளும் கட்சியைக் குறை கூறக்கூடாது. இதை அரசியலாக்கக் கூடாது. கூட்டம் அதிகமாக இருந்தது, நான் அணியினரிடம் பேசினேன், இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று அவர்களும் நினைக்கவில்லை, இந்த சம்பவம் திடீரென்று நடந்தது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச உதவி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.என என என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


