எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோ்ந்தெடுக்கப்படும்.
இந்நிலையில், 2026-28 ஆண்டுக்கான ஐ.நா. பொருளாதார- சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும். கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. தற்போது 18 ஆவது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
‘இந்தியா மீது மிகுந்த ஆதரவையும் நம்பிக்கை வைத்து வாக்களித்த ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி பிரச்னைகளை முன்னெடுப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும், ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என சமூக வலைதள பதிவு ஒன்றில் உறுதியளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


