Idhayam Matrimony

2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் ஒப்புதல்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      உலகம்
Pakis

Source: provided

பாகிஸ்தான்: 2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில், அந்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான 4.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்குடன் கூடிய தேசிய வளர்ச்சி பட்ஜெட்டிற்கு, ரூ.4,224 பில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.7 சதவீதமாக உள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாகிஸ்தானுக்கான நீர் ஆதாரங்களை முடக்க நினைக்கும் இந்தியாவின் திட்டத்தை பாகிஸ்தான் முறியடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மற்றும் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், விவசாய உற்பத்தியை மேம்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து