எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்.சி.பி. வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக...
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்.சி.பி. அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூரு விதானசெளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதானசெளதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
11 பேர் பலி...
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடைந்துவிட்டேன்...
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விராட் கோலி, “சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
சச்சின் இரங்கல்...
இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், "பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் என் இதயம் இரங்குகிறது. அனைவருக்கும் அமைதியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கோலியை காண...
17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்.சி.பி. அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததற்கான காரணம் விராட் கோலிதான். அவரை காண்பதற்காக தான் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சாலைகளிலும் மைதானத்திலும் கூடியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


