எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலமாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என தி.மு.க.வில் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது.
‘களம் 2026’ தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களை சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


