Idhayam Matrimony

பிரச்சினைகளுக்கு விரைவில் சுமுகத் தீர்வு: ராமதாஸ் உறுதி

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
Ramdoos 2025-06-07

Source: provided

சென்னை : “பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது.

2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம். முடிந்துபோனதை பேச வேண்டாம். முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி பேசுவோம். கமல்ஹாசனின் கன்னட சர்ச்சை விவகாரம் குறித்து நான் பதில் கூறுவது நன்றாக இருக்காது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை.” என்றார். மேலும், அன்புமணிக்கு மீண்டும் பா.ம.க. தலைவர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘பேசுவோம்’ என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து