எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தையும், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் திறந்துவைத்தார். மேலும், கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
அப்போது, " பஹல்காமில் மனிதநேயம் மற்றும் காஷ்மீர் பெருமிதம் ஆகிய இரண்டின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதும், காஷ்மீர் மக்களின் வருவாயைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். அதனால்தான் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தாக்கியது. காஷ்மீர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித் தரும் சுற்றுலாவை பாகிஸ்தான் குறிவைத்தது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியப் பிரதமர் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எவ்வித நம்பகமான ஆதாரங்களையும் முன்வைக்காமல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசமாகவே ஜம்மு-காஷ்மீர் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும். இந்த சட்ட மற்றும் வரலாற்று யதார்த்தத்தை எந்த விதமான சொல்லாடல்களாலும் மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


