எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும், சாலையின் நடுப்பகுதியிலும் மரக்கன்றுகள், செடிகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேரங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் வைக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மதுரை, தூத்துக்குடி இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தூத்துக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, வருகிற 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


