Idhayam Matrimony

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      உலகம்
Trump 2023-04-13

Source: provided

 வாஷிங்டன் : ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பயங்கர தாக்குதலை நடத்தியது. இதன் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு இந்திய எம்.பி.,க்கள் குழு நேரில் சென்று விளக்கம் அளித்தது.

அமெரிக்காவிற்கு சென்ற இந்திய குழுவிடம், ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என அந்நாட்டு வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் பார்லிமென்ட் குழுவினரிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு விளக்கம் அளித்தது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டும் என இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து