Idhayam Matrimony

பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
Kurtalam 2024 08 18

Source: provided

தென்காசி : பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. நேற்று பக்ரீத் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படகுகளுக்கு வண்ணம் தீட்டும் பணி, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படகு குழாமில் தண்ணீர் சற்று அதிகரித்ததும் படகு சவாரி தொடங்கி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து