Idhayam Matrimony

காசாவில் அதிர்ச்சி: ரூ.5 பிஸ்கட் பாக்கெட் ரூ.2,300-க்கு விற்பனை

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      உலகம்
Gaza War Parle G

காசா, இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.கடந்த 20 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள். காசாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகள் வழங்க முன் வந்த நிலையில் அதற்கு இஸ்ரேல் தடை விதித்தது. கடந்த இரு வாரங்களாக மட்டுமே அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத் தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே - ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் விலை தற்போது 2,300 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார்.

இதை பார்த்து பலர் அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனை கண்ட பயனர்கள் பலரும், பார்லே நிறுவனத்தை டேக் செய்து காசா மக்களுக்கு உதவுமாறு கூறி வருகின்றனர். 1938-இல் தொடங்கப்பட்ட பார்லே-ஜி இந்தியாவில் மலிவு விலையில் பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து சந்தையில் பிரபலம் அடைந்தது. 2011-ஆம் ஆண்டில், நீல்சனின் கூற்றுப்படி, பார்லே-ஜி உலகின் அதிக விற்பனையான பிஸ்கட்டாக மாறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து