எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : பெங்களூரு கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு...
குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, மறுநாள் (ஜூன் 4) பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோப்பையை வென்ற அணி வீரர்களைக் காண பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
ராஜினாமா...
இந்நிலையில், நிகழ்ந்த தவறுக்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) தாமாக முன்வந்து தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக நாங்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளோம். ஜூன் 6, 2025 தேதியிட்ட இதற்கான கடிதத்தை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவரிடம் அளித்துள்ளோம்.
பங்கு மிகவும் குறைவு...
இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்ததில் எங்கள் பங்கு மிகவும் குறைவு என்ற போதிலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாக ராஜினாமா செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகுராம் பட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். கூட்ட நெரிசல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.ஐ அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6, 2025) தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
நீதிமன்றத்தில் அறிக்கை...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளரான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எம். சின்னசாமி மைதானத்தை வாடகைக்கு மட்டுமே விட்டதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


