Idhayam Matrimony

பெங்களூரு கூட்ட நெரிசல்: கோலி மீது வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      விளையாட்டு
Veert-Coli-Dhoni 2025-03-24

Source: provided

பெங்களூரு : 11 பேரை பலி வாங்கிய வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசல்...

ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தம் வசப்படுத்தி இருக்கிறது. இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திரளான கூட்டம் கூடியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், வெற்றி கொண்டாட்ட ஏற்பாட்டாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவானது.

கோலி மீது வழக்கு... 

இதே சமயத்தில் கூட்ட நெரிசலுக்கு விராட் கோலியும் ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார், எனவே அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருந்தார். ஐ.பி.எல். போட்டி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டார், அவரின் தூண்டுதலின் பேரில் தான் மிக பெரும் கூட்டம் கூடியது என்று அதில் கூறப்பட்டு இருந்தது. தற்போது கூட்ட நெரிசலுக்கும், கோலிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவாரா?

தற்போது கோலி, மனைவி அனுஷ்காவுடன் லண்டனில் உள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாகவே முன் வந்து தங்கள் பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து