Idhayam Matrimony

வைகை அணையில் வரும் 15-ம் தேதி தண்ணீர் திறப்பு

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

கூடலூர் : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது. 764 கனஅடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பெரியாறு, வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து