Idhayam Matrimony

கமலின் சொத்து மதிப்பு: வேட்புமனுவில் தகவல்

சனிக்கிழமை, 7 ஜூன் 2025      தமிழகம்
CM-1 2025-06-06

Source: provided

சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.49.67 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து