எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6,329 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளுக்காக அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) 15-ம் தேதி மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


