Idhayam Matrimony

அமித்ஷாவை வரவேற்க காத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      தமிழகம்
Amitsha-2 2025-06-08

Source: provided

மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

மதுரையில் நேற்று (ஜூன் 8) மாலை நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியிலிருந்து அமித்ஷா சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது. இதையடுத்து அமித்ஷாவை வரவேற்க தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களுடன் அமித்ஷாவை வரவேற்க அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் விமான நிலையம் வந்தனர். இந்நிலையில் அமித்ஷா வருகையில் தாமதம் ஏற்பட்டது. ஒத்தக்கடையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த இடம் மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகே அமித்ஷா டெல்லியிலிருந்து புறப்படுவதாக இருந்தது. பின்னர் மேடை அமைப்பு பணி முடிந்து மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அமித்ஷா டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.

இதையடுத்து 3 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு இரவு 10.25 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார் அமித்ஷா. விமான நிலையத்தில் அமித்ஷாவை அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாநில துணைத் தலைவர் ராஜ ரத்தினம், மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் மாரிச்சக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து