Idhayam Matrimony

மாணவர்களின் இசைப்பள்ளி சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை புதிய அரசாணை

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய மொழி பாடங்களையும், பகுதி-3-ல் முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் பயில்கின்றனர். இந்த நிலையில், இசைப் பள்ளி மாணவர்கள் பகுதி 3-ல் முதன்மை பாடம், துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை பயில்கின்றனர்.

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் அவர்கள் தேர்ச்சி பெறும் பட்சத்தில், பகுதி 3-ல் அவர்கள் பயின்றதை சிறப்பு நிகழ்வாக முதன்மை பாடங்களாக கருதலாம். அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என அரசு தேர்வு துறை சான்றிதழ் வழங்கலாம்.

அதேபோல, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நேரடியாக இசைப் பள்ளிகளில் 3 ஆண்டு படித்து முதன்மை பாடங்கள் (தாள்-1, 2), துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு (கலை, தொழில் பிரிவுகள் மட்டும்) தேர்ச்சிக்கு இணையானது என அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கலாம்.

மாணவர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்பை தடையின்றி பெற வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழி தேர்வுகள் தங்களுக்கு தேவையில்லை என்று கருதும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மாவட்ட இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழை வழக்கம்போல தொடர்ந்து வழங்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து