எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. விரைவில் நல்ல செய்தி வரும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொண்டர்கள் எதிர்பார்த்த செய்தி விரைவில் வரும். விரைவில் நல்ல செய்தி வரும். தோட்டத்தில் இருந்து வருமா என்று தெரியாது. நல்ல செய்திக்காக காத்திருப்போம். அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. கலைஞர் கருணாநிதி நீண்ட நாள் 95 வயது வரை அரசியலில் இருந்தார்.
கூட்டணி எப்போது அமைப்பது, எப்படி அமைப்பது, ஏன் என்பது பற்றி 3 மாதங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும். கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம். எல்லா தலைவர்களையும் நேசிப்பவன், பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர். அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தது இல்லை, இருப்பினும் அவருக்கு வாழ்த்துகள்.
விஜய் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஜோசியம் கூற எனக்கு தெரியாது. சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன். முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் உறுதியாக கூற முடியாது. பா.ம.க. மீண்டும் பலமாக வரும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


