Idhayam Matrimony

கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜ.க. போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

பெங்களூரு : கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, நேற்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து