முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார்: எ.வ.வேலு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      தமிழகம்
EVa-Velu 2023 04 01

Source: provided

சென்னை : எடப்பாடி பழனிசாமி தான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார்  என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

200 தொகுதிகளில் வெல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. வெல்லும் என்ற தமிழக முதல்வரின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு, வெற்றி பெறுகின்ற கனவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து