Idhayam Matrimony

மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வரும் : ரொனால்டோ நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      விளையாட்டு
Ronaldo 2023 08 12

Source: provided

ரியாத் : போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார்.

பொற்காலம்...

கால்பந்து உலகில் தற்போது ரொனால்டோ, மெஸ்ஸிக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல் இருவரது ரசிகர்களும் எப்போதும் எதிரியாகத்தான் இருக்கிறார்கள். ரொனால்டோ அதிக கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். மெஸ்ஸி கோல்கள் அசிஸ்ட்ஸ் பட்டியலில் அவரை முந்தியுள்ளார். இருவரும் லா லீகா தொடரில் விளையாடிய காலங்கள் மிகவும் பொற்காலமாக இருந்தன.

போட்டியாளர்களாக...

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கும் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கும் விளையாடினார்கள். தற்போது, மெஸ்ஸி அமெரிக்காவில் இன்டர் மியாமி அணிக்காகவும் ரொனால்டோ சௌதியில் அல்-நசீர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில்  ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறியாதாவது: எனக்கும் மெஸ்ஸி மீது அன்பு இருக்கிறது. நாங்கள் 15 ஆண்டுகளாகப் போட்டியாளர்களாக இருந்து வருகிறோம்.

சிறப்பான பந்தம்...

மெஸ்ஸி சரியாக ஆங்கிலம் பேசாததால் அவருக்காக காலா நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். மெஸ்ஸி எப்போதும் என்னை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார். நானும் அதேபோல் அவரை நடத்துகிறேன். எனக்கும் ஆர்ஜென்டீனாவுக்கும் சிறப்பான பந்தம் இருக்கிறது. எனது மனைவி ஆர்ஜென்டீனா தான். அதனால், எனக்கும் அந்த நாட்டின் மீது நேசம் இருக்கிறது. நாங்கள் இணைந்து விளையாடுவோமா என்பது தெரியவில்லை. எனக்கு 40 வயதாகிறது. எப்போதும் முடியாது எனக் கூறமாட்டேன். நமக்குத் தெரியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து