முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 லட்சம் பயணிகள் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      தமிழகம்
Kelambakam 2023-12-29

Source: provided

வண்டலூர் : கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர். 

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து