Idhayam Matrimony

தலைமைப் பண்பில் முன்னேற்றம்: கம்மின்சுக்கு ஆஸி. முன்னாள் வீரர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      விளையாட்டு
Pat-Cummins 2024-04-06

Source: provided

லண்டன் : பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது.

பாராட்டு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள நிலையில், பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பண்பு... 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாட் கம்மின்ஸ் அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறார். ஒவ்வொரு நாளும் அவரது தலைமைப் பண்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆடுகளத்துக்கு உள்ளே மட்டுமின்றி, ஆடுகளத்துக்கு வெளியேயும் அவரது தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் அணியை வெற்றிகரமாக வழிநடத்துவது கடினம். ஆனால், பாட் கம்மின்ஸ் அதனை சிறப்பாக செய்து வருகிறார். பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இணைந்து அவர் அணியை நன்றாக வழிநடத்துகிறார் என்றார்.

வெற்றி சதவிகிதம் 60.60... 

இதுவரை ஆஸ்திரேலிய அணியை 33 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ள பாட் கம்மின்ஸ் 20 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அவரது வெற்றி சதவிகிதம் 60.60 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து