எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகையும், அ.தி.மு.க. நிர்வாகியுமான கவுதமி, தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முடிவு செய்வார் என தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடிகையும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கவுதமியை அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, நரசிம்மர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம் ஆகியவற்றில் கவுதமி சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை கவுதமி கூறும்போது, “2026-ல் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான நியாயமான ஆட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஆண்டாள் தாயாரிடம் அதையே வேண்டி உள்ளேன். தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு எனது பணியை சிறப்பாக செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
2026 தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளேன். புற்றுநோய் விழிப்புணர்வு, கல்வி என பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


