Idhayam Matrimony

மக்களவை துணை சபாநாயர் பதவி: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      இந்தியா
karke 2023-08-10

புதுடெல்லி, மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "அரசியலமைப்பு ரீதியாக மக்களவை துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, ​​மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகர் தேர்வுக்கான நடைமுறையைப் போன்றதே. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பவர் சபாநாயகர் என்பது மட்டுமே. முதல் மக்களவை முதல் பதினாறாவது மக்களவை வரை, ஒவ்வொரு சபைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களில் இருந்து துணை சபாநாயகரை நியமிப்பது மரபு.

 எனினும், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, இந்தப் பதவி கடந்த 17-வது மக்களவையிலும், தற்போதைய 18-வது மக்களவையிலும் காலியாகவே உள்ளது. இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, கூடிய விரைவில், புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து