Idhayam Matrimony

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? மத்திய அமைச்சர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      இந்தியா
Gajendra-Singh-Shekhawat-20

சென்னை, கீழடி ஆய்வு  குறித்து அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என  மத்திய அமைச்சர்  கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடையே அவர் இது தொடர்பாக பேசுகையில், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் தெரியவேண்டி உள்ளன. இன்னும் அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும். கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்து அளவீடுகளிலும் முழுமை பெறும் போது உரிய அங்கீகாரம் கிடைக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும் வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழக ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அயோத்தியில் அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதை நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து