எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.
முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. 1. 15.06.2025 ஞாயிறு காலை 10 மணி - திருவள்ளூர் மாவட்டம், 2. 15.06.2025 ஞாயிறு மாலை 3 மணி - செங்கல்பட்டு மாவட்டம், 3. 16.06.2025 திங்கள் காலை 10 மணி - காஞ்சிபுரம் மாவட்டம், 4. 16.06.2025 திங்கள் மாலை 3 மணி -ராணிப்பேட்டை மாவட்டம், 5. 17.06.2025 செவ்வாய் காலை 10 மணி - வேலூர் மாவட்டம், 6. 17.06.2025 செவ்வாய் மாலை 3 மணி -திருப்பத்தூர் மாவட்டம், 7. 18.06.2025 புதன் காலை 10 மணி - திருவண்ணாமலை மாவட்டம், 8. 18.06.2025 புதன் மாலை 3 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம், 9. 19.06.2025 வியாழன் காலை 10 மணி -சேலம் மாவட்டம், 10. 19.06.2025 வியாழன் மாலை 3 மணி -தருமபுரி மாவட்டம்.
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


