எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி விதிகள் - கிராம உதவியாளர்கள் நியமனம் - திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 1) அரசாணை (எம்.எஸ்) எண் 625, வருவாய்த்துறை. நாள் 06.07.1995., 2) அரசாணை (எம்.எஸ்) எண் 521, வருவாய்த்துறை. நாள்17.06.1998., 3) அரசாணை (எம்.எஸ்) எண் 375, வருவாய்த் (பணி-8(1)) துறை, நாள்.19.10.2015., 4)அரசாணை (நிலை) எண் 574, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் அலகு/பணி-8(1) பிரிவு, நாள் 17.10.2020, 5) அரசாணை (நிலை) எண் 97 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.03.2024, 6) இவ்வலுவல கடித எண் வ.நி 2(2)/ 02-28/1/2024 நாள் 17.03.2025 மற்றும் 26.05.2025, 7) அரசாணை (நிலை) எண் 266, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 22.05.2025, 8) அரசாணை (நிலை) எண் 312, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 04.06.2025, பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
பார்வை (5) -ல் காணும் அரசாணையில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. பார்வை (8) -ல் காணும் அரசாணையில், கிராம உதவியாளர்கள் தேர்வுமுறை மற்றும் பணிநியமனத்தின் போது மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, பார்வை (8) -ல் காணும் அரசாணையினை பின்பற்றி, மேற்படி பார்வை (5)-ல் காணும் அரசாணையில் அனுமதிக்கப்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


