Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ. 159.53 கோடி மதிப்பில் 11 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

புதன்கிழமை, 11 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

ஈரோடு, முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர்  அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதல்வர்  வழங்கினார்.

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் வருமாறு., கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பவானி வட்டம், ஜம்பையில் 59 லட்சம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகம், கூட்டுறவுத் துறை சார்பில் சத்தியமங்கலம் வட்டம் கோணமூலை கிராமத்தில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 1000 மெ.டன் ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலகக் கட்டிடம், 51 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட முகாசிப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கட்டிடம்,  நீர்வளத்துறை சார்பில் தாளவாடி வட்டம், மல்லன்குழி கிராமம், பீமராஜ் நகரில் 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மெட்டல்வாடி அருகில் 38 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, பைனாபுரம் கிராமம், தொட்டமுடுகரையில் 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மாதேஸ்வரன் கோவில் அருகில் 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தரைப்பாலம் மற்றும் மண் சாலை; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அந்தியூர் வட்டம், கொண்டையம்பாளையம் கிராமத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சத்தியமங்கலம் வட்டம், பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையத்தை திறந்து வைத்தார். 

வனத்துறை சார்பில் அந்தியூர் வனச்சரகம், கொங்காடை கிராமத்தில் 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் காவல் சுற்றில் 2 கி.மீ.-க்கு 10 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், கேர்மாளம் மேற்கு காவல் சுற்றில் 1 கி.மீ.-க்கு 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள யானை புகா அகழிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சியில் பொன்முடி ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமத்தில் 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் விவசாய சேமிப்பு கிடங்கு, அந்தியூர் ஒன்றியம், நகலூர் ஊராட்சி, சோலைகர் காலனியில் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம் என மொத்தம் 15 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை  முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் வருமாறு., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 136 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஜீரோ திரவ வெளியேற்ற அடிப்படையிலான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து, கட்டுமானப் பணிகள், இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் பணி, நீர்வளத்துறை சார்பில் அணை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கீழ்பவானி அணை (பவானி சாகர் அணை) 19 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 1 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் நீர்பாசன வசதிப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 விவசாய சேமிப்பு கிடங்குகள் மற்றும் 6 கதிரடிக்கும் களங்கள் என மொத்தம் 159 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2163 பயனாளிகளுக்கு 2 கோடியே 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம்,  தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தமிழ்நாடு நீர்வள நில வள மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களில் நிதியுதவி; வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு 48 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் உட்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வேளாண்மை கட்டமைப்பு நிதி, பொருளீட்டுக் கடன் ஆகிய திட்டங்களில் நிதியுதவி; வேளாண் பொறியியல் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்குதல், மானியத்துடன் கூடிய மின்மோட்டார்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1256 பயனாளிக்ளுக்கு 9 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்; தாட்கோ சார்பில் 23 பயனாளிகளுக்கு 40 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் மற்றும் பிரதம மந்திரி அஜய் திட்டங்களில் உதவிகள்; கூட்டுறவுத் துறை சார்பில் 746 பயனாளிகளுக்கு 8 கோடியே 70 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்தியகாலக் கடன், கூட்டுப்பொறுப்பு குழுக் கடன் ஆகிய திட்டங்களில் கடனுதவி; மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 1 கோடியே 58 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணை; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என மொத்தம் 25 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து