முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026-ல் தமிழகத்தில் இ.பி.எஸ். தலைமையில் கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதன்கிழமை, 11 ஜூன் 2025      அரசியல்
Nainar 2025-04-01

திருநெல்வேலி, தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இ.பி.எஸ். தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : எங்கள் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளும் வரும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அது குறித்து பின்னர் தெரியவரும். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று இ.பி.எஸ். தலைமையில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும்.

மக்கள் வாக்களித்த பின்னர்தான் எது வலிமையான கூட்டணி என்பது தெரியவரும். தாங்கள் தான் வலிமையான கட்சி என்று கூறிக் கொள்ளும் தி.மு.க. தேர்தலில் தனித்து நிற்க தயாரா?. மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த மாநாடு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த மாநாட்டில் எல்லோரும் கலந்து கொள்ளலாம். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள முருக பக்தர்களும் கலந்து கொள்வார்கள். மதவாதம் இருக்கக் கூடாது. மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வருபவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

கீழடி விவகாரத்தில் உண்மை நிலையை நேரில் சென்று கண்டறிந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி பாதுகாப்புக்கு மிகப்பெரிய உறுதியை பிரதமர் மோடி தந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ 10 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து பேசுகிறார்கள். தமிழ் மொழிக்கு மோடி அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுமைக்கு கொண்டு சேர்த்துள்ளார் மோடி. காசியிலும், குஜராத்திலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து