Idhayam Matrimony

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

Source: provided

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.  .

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விமானம் மோதிய பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 மாணவர்களும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளதாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் செய்து தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து