முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
Rajnath-Singh 2024-08-30

Source: provided

டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல் 

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கை அதிபர்களுடனான கலந்துரையாடலில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

பா.ஜனதா ஆட்சி, தொடர்ச்சியாக 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை அந்த கட்சி விமரிசையாக கொண்டாடுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடலும் நடந்தது. இந்த வகையில் நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் பற்றி தென்னிந்திய பத்திரிகை மற்றும் ஊடக அதிபர்கள், மூத்த செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதார மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரது முன்னிலையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 11 ஆண்டுகால சாதனைகளை துறை வாரியாக புள்ளி விவரங்களுடன் விவரித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு எப்படி இருந்தது?, தற்போது எந்தெந்த துறைகளில் என்ன வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது? என்பதை பட விளக்கத்துடன் காண்பித்தார்.

குறிப்பாக பெண்கள் மேம்பாடு, விவசாயிகள் நலன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார். யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கான நேரம் 2 வினாடிக்கும் குறைவுதான் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மந்திரிகள் மூவரும் பத்திரிகை அதிபர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து இரவு விருந்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி கலந்துரையாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து