முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. அணியை வாங்க பைத்தியக்காரனா? கர்நாடக துணை முதல்வர் ஆவேசம்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

பெங்களூரு: ஆர்.சி.பி. அணியை வாங்க  நான் பைத்தியக்காரன் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

11 பேர் உயிரிழப்பு...

ஐ.பி.எல். தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்.சி.பி. இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு விவகாரத்தில் ஆர்.சி.பி. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர், செயளாலர் ராஜிநாமா செய்தார். விராட் கோலி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பைத்தியக்காரன் இல்லை...

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆர்.சி.பி. அணியை விற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வாங்குவதாக தகவல் வெளியாகியது. இது குறித்து அவர் பேசியதாவது: நான் பைத்தியக்காரன் இல்லை. எனது இள வயதில் இருந்தே நான் கார்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதே இருந்தே எனக்கு அதில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டாலும் எனக்கு நேரம் இருந்ததில்லை.

நேரமில்லை...

எனது கல்வி நிறுவனத்தைக் கூட பார்த்துக்கொள்ள நேரமில்லாமல் எனது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டு நான் ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு ஏன் ஆர்.சி.பி. தேவைப்படுகிறது? நான் ராயல் சேலஞ்சஸ் மதுவைக் கூட குடித்ததில்லை என்றார். ஆர்.சி.பி. அணியின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (ரூ. 8,600 கோடி) இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து