எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கீவ் : உக்ரைனில் ரஷ்யா மீண்டும் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷ்ய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா நகரக்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை குறிவைத்து ரஷ்ய படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். சுமார் 9 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 54 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 17 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கார்கிவ் நகர மேயர் இகோர் தெரகோவ் தெரிவித்துள்ளார். மேலும் இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியிருப்பதாகவும், அவரக்ளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


