எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். இதில் பல விடுதிகள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த வகையில் கொடைக்கானல் அடுத்துள்ள அடுக்கம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக நகர திட்டமிடல் துறையின் திண்டுக்கல் மாவட்ட திட்டமிடல் அலுவலர், உதவி இயக்குநர் மற்றும் கொடைக்கானல் திட்ட மேம்பாட்டு அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட இடத்தில் நகர திட்டமிடல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை அடையாளம் கண்டு அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


