Idhayam Matrimony

தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு : இந்தியாவுக்கு சீனா நன்றி

புதன்கிழமை, 11 ஜூன் 2025      இந்தியா
Karala 2025-06-09

Source: provided

புதுடில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்து உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7 ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்த போது இக்கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கப்பலில் 22 பேர் இருந்த நிலையில், அதில் 14 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். கப்பலில் இருந்தவர்களில் 4 பேரை காணவில்லை. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதற்கு நன்றி தெரிவித்து இந்தியாவிற்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் 9 ல் கேரளாவின் 44 கடல் மைல் தொலைவில் வெடிப்பு காரணமாக கப்பல் தீப்பிடித்தது. கப்பலில் இருந்த 22 பேரில் 15 பேர் சீனர்கள். 6 பேர் தைவானைச் சேர்ந்தவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படைக்கும், மும்பை கடலோர காவல்படைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முடியவும் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து