முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்

புதன்கிழமை, 11 ஜூன் 2025      தமிழகம்
Tangam 2025-06-11

Source: provided

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் உள்ள ராஜசந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஜூன் 11) காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் முருகன் (45), பிச்சையம்மாள் (43), கணேசன் (43), மாரியம்மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் நேற்று உனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை மேலாளர் கல்குறிச்சியைச் சேர்ந்த வீரசேகரன் (53), போர்மேன் கனிமுருகன் (23) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், “பட்டாசு ஆலை விபத்துக்கான உரிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து