முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்பாட்டில் விரைவில் புதிய விதிமுறை அமலாகிறது : மத்திய அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 11 ஜூன் 2025      இந்தியா
Manohar-Lal-Khattar 2025-06

Source: provided

புதுடெல்லி : அதிகரித்துவரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை வரவுள்ளதாக  மத்திய அமைச்சர்  மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களிடையே ஏ.சி. பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் கூட வீட்டில் ஏ.சி. வாங்கி பயன்படுத்தினார்கள். வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏ.சி.-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்  மனோகர்லால் கட்டார், ஏ.சி. வெப்ப நிலை அளவில் மாற்றம் கொண்டு வர மூடிவு செய்து இருப்பதாக கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் கிடைத்த பேட்டியில் கூறியதாவது:

ஏ.சி.-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலையைச் சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதன்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.

வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏ.சி.-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏ.சி.-க்களுக்கும் பொருந்தும். பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றார்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இனிமேல் அறிமுகப்படுத்தப்படும் ஏ.சி. சாதனங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 20 கீழ் இருக்காது அதேபோல் அதிகபட்ச வெப்பநடையும் 28 க்கு மேல் கொண்டு போக முடியாது. சோதனை அடிப்படையில் இது கொண்டு வரப்பட இருப்பதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கட்டாக கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து