எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வழக்கமாக டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி வரை செல்லும். சுமார் 230 நாட்களுக்கு பாசனத் தேவைக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படம்.
மொத்தம் 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையில் 94 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது அதில் 85.15 டிஎம்சி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டமும்114.62 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 5146 கன அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 1000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.
போதிய அளவு தண்ணீர் இருப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையின் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்துவிட உள்ளார். இது அடுத்த சில நாட்களில் மாயனூர் கதவணை, மேலணையை அடைந்து வரும் 15-ம் தேதி கல்லணையை அடைய உள்ளது. அங்கும் 15-ம் தேதியே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறித்த நேரத்தில் இன்று மேட்டூர் அணை இன்று திறக்கப்படவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை நீர்திறப்பு மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


