எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்து குறித்து குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியதவாது:- அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் சிவில் மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பி.ஜே. மருத்துவத்தில் டி.என்.ஏ சோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விமானப் பயணிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள், அந்த இடத்தில் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். பயணிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பிற காயமடைந்தவர்கள் ஏதேனும் விசாரணை செய்ய வேண்டுமானால், சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த உதவிக்கும் , 6357373831 மற்றும் 6357373841 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


