Idhayam Matrimony

விமான விபத்து: மீட்புப்பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-4

Source: provided

புதுடில்லி: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்தமருத்துவ கல்லூரி விடுதி மீதும் விழுந்தது. இதில் மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோருக்கு உதவி செய்ய 130 பேரை அனுப்பிவைத்துள்ளோம். இந்த குழுவில் இடிபாடுகளை அகற்றும் ஜே.சி.பி. குழுவினர், மருத்துவக் குழுவினர், அதிவிரைவு குழுவினர், தீயை அணைக்கும் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பொறியியல் குழுவினர் உதவி வருகின்றனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து