Idhayam Matrimony

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சினில் கோளாறா? - பயணி புகாரால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-3

Source: provided

அகமதாபாத் : விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த அந்த விமானத்தில்  வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தாக பயணி ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,  பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லண்டனை சேர்ந்த ஒருவர் மட்டும் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  

இதே விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த அகமதாபாத்தை சேர்ந்த ஆகாஷ் வத்சா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, "ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்தான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை 'டேக்' செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன்" என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பயணியின் இந்த குற்றச்சாட்டின் மூலம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதாவது, எப்போதோ ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவராலே விமானத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர முடியும்போது, விமானத்தை இயக்கும் விமானியால் உணர முடியாதா?, இதுகுறித்து அவர் ஏர் இந்தியா தொழில்நுட்ப பிரிவிடம் புகார் அளித்தாரா?, பின்னர் இதே விமானம் அகமதாபாத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டபோது முந்தைய விமானியே இயக்கினாரா?, அதுமட்டுமல்லாமல், பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்த புகாருக்கு ஏர் இந்தியா செவிசாய்க்கவில்லையா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம்தான் முறையான பதில் அளிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து