Idhayam Matrimony

உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      உலகம்
Netanyahu-(Israeli)

Source: provided

ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை துவக்கியது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரானில் 'ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க, ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை நீக்க, இந்த தாக்குதல் நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்.  

மிகக்குறுகிய காலத்தில் அணுகுண்டுகளை ஈரான் உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது. இது, இஸ்ரேல் நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல். எங்கள் நாட்டை அழிப்பதாக கூறுபவர்கள், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது. இந்த நிலையை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இஸ்ரேல் இப்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து