எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தன்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3-ம் கட்டமாக விருது வழங்கி த.வெ.க. தலைவர் விஜய் கவுரவித்தார்.
விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், குஜராத்தில் ஒரு மிகப்பெரிய, சோகமான விமான விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள், புகைப்படங்களைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்தவர்களுக்காக 2 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்துவோம். 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றி பேசாதீர்கள். என்னை காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர்கள், உங்கள் பள்ளி பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள்.” என்றார்.
முன்னர் நடந்த விருது நிகழ்ச்சியின் போது மாணவர் ஒருவரின் தந்தை விஜய்யை ‘இளைய காமராஜர்’ எனப் பாராட்டியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரும் 2026 தேர்தலில் விஜய் வென்று முதல்வராக வேண்டும் என்றும் பேசியிருந்தனர். இதனையடுத்தே விஜய் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


