எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், 6 பேரின் முகம் அப்படியே இருந்ததால், அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதே பரிசோதனை நடைமுறைகளை கையாளும் ஆய்வாளர் சிராக் கோசாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "வியாழக்கிழமை விபத்துக்குப் பிறகு குறைந்தது 265 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், ஆறு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த டி.என்.ஏ. விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இறந்த 215 பேரின் உறவினர்கள் தங்கள் மாதிரிகளை வழங்க எங்களை அணுகியுள்ளனர். டி.என்.ஏ மாதிரிகளைப் பொருத்தும் பணியை முடிக்க கிட்டத்தட்ட 72 மணிநேரம் ஆகும். பொருத்தம் ஏற்பட்டவுடன், உடல்கள் பிரேத பரிசோதனை அறையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 விமானப் பயணிகள் உயிரிழந்தனர். அதோடு, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


