எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தைலாபுரம் : தன்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன், என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில், நேற்று (ஜூன் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ 2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன். ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கும்போதும், அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போது, என்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை, அந்தப் பதவியை நான் கொடுக்கமாட்டேன். ஆனாலும் இந்த கட்சியை கொஞ்சம்கூட தொய்வில்லாமல் நடத்த எனக்கு ஆதரவு வருகிறது.
எனவே, தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கூறுகிறேன், என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை பா.ம.க. தலைவர் பதவியில் இருப்பேன். நான் கட்சி ஆரம்பிக்கும்போது, எனது குடும்பத்தினர் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோருக்கு பதவியை கொடுத்தபோது, அவர்களுடைய செயல்பாடுகள் மனதுக்கு திருப்தியாக இல்லாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கையின்படி 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்தேன்.” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


