Idhayam Matrimony

விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
Air-India

Source: provided

அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம்  அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்  வானில் பறந்த சில நிமிடங்களில்,  அந்த விமானம் விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  பயணிகள் உள்பட பலர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோர சம்பவத்தில், விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர்தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பயணிகளில் 169 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டவர்கள், 7 போர்த்துகீசிய நாட்டவர்கள் மற்றும் 1 கனடா நாட்டவர் அடங்குவர். உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தில், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானியும் பயணித்தார். அவரும் இந்த விபத்தில் சிக்கி பலியானார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து